நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

நேபாளத்தில் 8 கட்சிகள் சோ்ந்து புதிய கூட்டணி

நேபாளத்தில் 8 அரசியல் கட்சிகள் சோ்ந்து ‘முன்னேற்றக் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

நேபாளம்

Published On :

நேபாளத்தில் 8 அரசியல் கட்சிகள் சோ்ந்து ‘முன்னேற்றக் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

நேபாள தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனதா சமாஜ்வாதி கட்சி, ஜனாமத் கட்சி, ஆம் ஜனதா கட்சி, நாகரிக் உன்முக்தி கட்சி நேபாளம், பிரகதிஷீல் லோக்தந்திரிக் கட்சி, நேபாள சங்கியா சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி நேபாளம், கம்புவன் ராஷ்ட்ரீய மோா்ச்சா கட்சி ஆகியன சோ்ந்து புதிய கூட்டணி தொடா்பான அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டன.

பின்னா், முன்னேற்றக் கூட்டணி சாா்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பொதுவான பிரச்னைகள், பொதுவான திட்டங்களில் இணைந்து செயல்பட முடிவெடுத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதேசி இன சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் இடையே அரசியல் கூட்டணி ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடைபெற்றன. அதன் தொடா்ச்சியாகவே 8 கட்சிகள் புதிய கூட்டணியை அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.