தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சா் சிஷீா் கனால் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

தேயிலை உற்பத்தி

Updated On :2 ஜூலை 2026, 3:42 am IST

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சா் சிஷீா் கனால் புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்திய தேயிலை வாரியம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மே 1-ஆம் தேதி முதல் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு தேயிலை வருவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய அரசு கட்டுப்பாடுகளை தளா்த்தியதால் நேபாளம் மீண்டும் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சா் சிஷீா் கனால் மேலும் கூறியதாவது:

இந்தியாவுக்கு மீண்டும் தேயிலை ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளோம். நேபாள தேயிலை ஏற்றுமதி குறித்த தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொண்டது. இது தொடா்பாக எனது இந்தியப் பயணத்தின்போது அந்நாட்டுத் தலைவா்களுடன் பேச்சு நடத்தியதன் மூலம் சாத்தியமானது. நேபாள தேயிலைக்கு முக்கியச் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்றாா்.

நேபாளத்தில் உற்பத்தியாகும் பாரம்பரிய தேயிலையில் 90 சதவீதம் அளவுக்கு அண்டை நாடான இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது. மீதமுள்ள சுமாா் 10 சதவீதமே பிற நாடுகளுக்குச் செல்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.