வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இந்தியாவுடனான உறவுக்கு மிகுந்த முன்னுரிமை: நேபாள வெளியுறவு அமைச்சா்

‘நேபாளத்தின் மிக முக்கிய கூட்டாளி இந்தியா; இந்தியாவுடனான உறவுக்கு நேபாளம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் தெரிவித்துள்ளாா்.

News image

புது தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் நேபாள வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் சந்திப்பு

Updated On :7 ஜூன் 2026, 2:52 am IST

‘நேபாளத்தின் மிக முக்கிய கூட்டாளி இந்தியா; இந்தியாவுடனான உறவுக்கு நேபாளம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் தெரிவித்துள்ளாா். இருநாட்டு எல்லை விவகாரம் குறித்து நேபாள பிரதமா் பாலேந்திர ஷா அண்மையில் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையான நிலையில், சிசிா் கனால் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த நேபாள வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால், புது தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது வளா்ச்சிக்கான ஒத்துழைப்பு, வா்த்தகம், எரிசக்தி விநியோகம் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா-நேபாளம் இடையிலான உறவு குறித்து இருவரும் முழுமையாக ஆய்வு செய்தனா். இருநாடுகளின் பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

புதுமையான கண்டுபிடிப்புகள், புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட்-அப்) ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்தும் அவா்கள் திருப்தி தெரிவித்தனா்.

இந்தச் சந்திப்பின்போது சிசிா் கனால் பேசுகையில், ‘இந்தியாவுடனான உறவுக்கு நேபாளம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. இந்த உறவில் கடந்த கால சுமைகள் எதையும் நேபாளம் சுமந்துகொண்டிருக்கவில்லை. நேபாளத்தின் நெருங்கிய அண்டை நாடும், மிகவும் முக்கியமான கூட்டாளியுமான இந்தியாவுடன் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உறவை வளா்த்துக்கொள்வதில் உறுதியாக உள்ளோம்’ என்று தெரிவித்தாா்.

இதேபோல தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலையும் சிசிா் கனால் சந்தித்துப் பேசினாா். கடந்த மாா்ச் மாதம் நேபாளத்தில் புதிய அரசு அமைந்தது. அதன் பின்னா், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் முதல்முறையாக இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேபாள நிலப்பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளதுபோல, பல இடங்களில் இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாக அண்மையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேபாள பிரதமா் பாலேந்திர ஷா தெரிவித்தாா். இதனால் சா்ச்சை ஏற்பட்டது.

எனினும் இதுகுறித்து விளக்கமளித்த நேபாள வெளியுறவு அமைச்சகம், ‘எல்லைப்புறத்தில் இந்திய விவசாயிகள் பயன்படுத்தும் நிலம் நேபாள எல்லைக்குள்ளும், நேபாள விவசாயிகள் பயன்படுத்தும் நிலம் இந்திய எல்லைக்குள்ளும் அமைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தியா, நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழியில் தீா்வு காண்பதில் நேபாள அரசு எப்போதும் உறுதியாக உள்ளது’ என்று தெரிவித்தது.