புது தில்லி : நேபாளத்துக்கு இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு என்று நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் குறிப்பிட்டார்.
நேபாளத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் கடந்த மார்ச் இறுதியில் பிரதமராக ‘ராப்’ இசைப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா(35) பதவியேற்ற பின், இந்தியா - நேபாள எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் அண்மையில் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் விவாதப் பொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார்.
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எந்தவொரு பழைய மூட்டையையும் நாங்கள் சுமப்பதில்லை. எங்களுடைய நெருக்கமான அண்டை நாடும் மிக முக்கிய நட்பு நாடுமான இந்தியாவுடன் உண்மையான உறவைப் பேண தீர்க்கமான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
இது குறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடும்போது, ‘இருநாட்டு உறவை புதிய துறைகளான புத்தொழில், செய்யறிவு, தகவல் தொழில்நுட்பம், மாற்றத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் முன்னெடுத்துச் செல்லவொரு வாய்ப்பு கிடைத்திருப்பதாகக்’ குறிப்பிட்டார்.
Summary
India is Nepal's most important partner, new govt carries no 'old baggage': Foreign Minister Khanal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








