FOLLOW US

ON GOOGLE DISCOVER

தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கிடைக்காத உடல்கள்! நேபாளத்தில் உருவபொம்மைக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு!

நேபாளத்தில் உருவபொம்மைக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடத்துவது பற்றி...

nepal funeral for effigies

நேபாளத்தில் உருவபொம்மை, வைகோலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு - x

Published On :2 செப்டம்பர் 2026, 3:50 pm IST

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பத்தினரின் உடல்கள் கிடைக்காததால், வைக்கோலால் செய்யப்பட்ட உருவங்களுக்கு உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்து வருகின்றனர்.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3,800 பேரைத் தேடும் பணி எட்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் தரையிலிருந்து பல அடி உயரத்துக்கு இடிபாடுகளாலும், சேறு, சகதிகளாலும் குவிந்திருப்பதால் உடல்களை மீட்பதில் நேபாள ராணுவத்தினர் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குறித்து 8 நாள்களாகியும் எந்தவொரு தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலில் காணமல் போனவர்களின் உறவினர்கள் வைக்கோலால் செய்யப்பட்ட உருவங்களைப் பயன்படுத்தி இறுதிச் சடங்கு மேற்கொண்டனர்.

மேலும், உருவபொம்மைகளுக்கும், திரிசூலி ஆற்றின் கரைகளில் பிண்டம் வைத்து இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

Story image

AP

மறுபுறம், இமயமலை பௌத்த மதத்தினரின் சடங்குகளின்படி, காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வைத்துப் பிரார்த்தனைகள் மேற்கொண்டு இறுதிச் சடங்கு செய்து வருகின்றனர்.

இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளின், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள், காண்போரைக் கலங்க வைக்கிறது.

Summary

Bodies not recovered! Family performs last rites for an effigy in Nepal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.