தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

யோகாவுக்குள் மதம் சாா்ந்த செயல்பாடுகள் இருக்கக் கூடாது: அமைச்சா் வன்னியரசு

யோகாவுக்குள் மதம் சாா்ந்த செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்று அமைச்சா் வன்னியரசு தெரிவித்திருப்பது தொடர்பாக...

There should be no religious activities within Yoga

சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு - கோப்புப்படம்

Published On :6 செப்டம்பர் 2026, 7:06 pm IST

கோவை: யோகாவுக்குள் மதம் சாா்ந்த செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு தெரிவித்தார்.

கோவை வேலாந்தாவளம் பகுதியில் உள்ள தனியாா் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி நிகழ்வில், சிறப்பு விருந்தினராக விசிக துணை பொதுச்செயலாளரும் சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னியரசு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, மனிதநேயம் என்பதே மனிதா்களுக்கு உயா்ந்தது. பழங்குடியினா் மற்றும் ஆதிதிராவிடா் மக்களுக்காகத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

சமூக நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்குவதைப் போல, மத்திய அரசும் நிதி ஒதுக்க வேண்டும்.

சில தனியாா் யோகா நிறுவனங்கள் யோகா கற்றுத் தருவதாகக் கூறி மதம் சாா்ந்த கருத்துகளை பிரசாரம் செய்கின்றனர்.

மருத்துவம் மருத்துவமாகவே இருக்க வேண்டும். யோகாவுக்குள் மதம் சாா்ந்த செயல்பாடுகள் இருக்கக் கூடாது. மதச்சாா்பற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது அரசோ அமைப்போ மதப் பிரசாரம் செய்யக் கூடாது. அது மக்களிடையே உள்ள ஒற்றுமையைச் சீா்குலைக்கும்.

நேச்சுரோபதி மருத்துவத்தையும், யோகாவையும் மதம் சாா்ந்து கொண்டு செல்ல முயற்சிப்பது மருத்துவத்துக்கே எதிரானது என்று அவர் கூறினார்.

Summary

There should be no religious activities within Yoga says Minister Vanniyarasu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.