தமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

தமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது பற்றி..

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்பிலிருந்து..

Updated On :

காவிரி விவகாரத்தில், உடனடியாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், இனியும் தமிழக அரசு மௌனம் காக்கக் கூடாது என்று வலியுறுத்தி முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

மேக்கேதாட்டு அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையிலேயே கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் பேசி வரும் நிலையில், நமது விவசாயிகளைக் காப்பதற்காகத் தமிழ்நாட்டின் கட்சிகளும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியம் என்பதை நான் வலியுறுத்தி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தேன்.

மேக்கேதாட்டு அணை கட்டும் பிரிச்னையை நடுவர் மன்றத்துக்கு அனுப்ப வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய போது, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்பதைச் சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரிடம் அளிப்போம் என்றும் தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து மீண்டும் தீவிரமாகப் பேசத் தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், இனியும் தமிழ்நாடு அரசு மௌனம் காக்கக் கூடாது. எனவே, நமது ஒற்றுமையையும் கர்நாடக முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று இக்கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், மேகதாது அணைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தையும், தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காவிரி உரிமையைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக நிற்பது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

பல்வேறு விவகாரங்களில், தமிழக முதல்வர் விஜய்யை விமர்சித்து வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது காவிரி விவகாரத்தில் நேரடியாக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Summary

Regarding the letter written by DMK leader M.K. Stalin to Joseph Vijay...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.