விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?
விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருப்பது ஏன் என்பது பற்றிய ஆச்சரியமான தகவல்கள்...

express train - file photo
இந்திய இரயில்வேயின் விரைவில் ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், படுக்கைகள் பொதுவாகவே நீல நிறத்தில் இருக்கும்.
ஆனால், இது ஏதோ ஒரு காரணமற்ற செயல் என்று பெரும்பாலானோர் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியில்லை, இதற்கு மிகவும் அடிப்படையான ஆச்சரியமான சில காரணங்கள் உள்ளன.
நிற உளவியலின்படி, பெரும்பாலான நிறங்கள் மனித உணர்வுகளிலும் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை.
எனவே, நீல நிறம் அமைதி, நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகிய உணர்வுகளுடன் தொடர்புடையது. நீல நிறம் வானம் மற்றும் கடல் போன்ற இயற்கையின் நிறமாகவும் உள்ளது.
இரயில் பயணங்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடியவை என்பதால், இரயில் பெட்டிகளின் நிறம் கண்களுக்கு இதமாக இருக்க வேண்டும். அந்த வகையில், நீல நிறம் ஒரு சிறந்த தெரிவாக மாறியிருக்கிறது.
அது மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் ரயில்களில் பயணிக்கிறார்கள். பயணிகள் அமர்ந்து, உணவு உண்ணும்போதும், தேநீர் போன்றவற்றை குடிக்கும்போதும், இருக்கைகள் அழுக்கடையும்.
எனவே, இந்த நீல நிறம் எனப்து கறைகளை அவ்வளவு எளிதில் காட்டிக் கொடுக்காததாகவும், கறைகள் இருந்தால் தெரியும் வகையிலும் சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. எனவே, இருக்கைகள் அசுத்தமாகும்போது அவை தொடர்ந்து சுத்தப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்பதால் நீல நிறம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்ற ஆச்சரிய தகவல் கிடைத்துள்ளது.
அதோடு, விரைவு ரயில்கள் என்றாலே பயணங்கள் பெரும்பாலும் 10 மணி நேரத்துக்கும் மேல்கூட நீடிக்கும். எனவே, ஒரே பெட்டியில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, அவர்களது மன ஓட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காத ஒரு நிறமாக இந்த நீலம் இருக்கிறது.
மேலும், நீல நிறம் கண்களுக்கு இதமாக இருப்பதோடு, ரயில் பெட்டிக்குள் ஒரு அமைதியான சூழலை உருவாக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Are there so many reasons why the seats in express trains are blue?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

