டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்!

பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது பற்றி...

Fire breaks out in four coaches near Punjab's Rajpura

எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து. - (Screengrab via X)

Updated On :

பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா அருகே, அமிர்தசரஸ் நோக்கிச் சென்ற கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்தது. இதனால் பயணிகள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில், ரயிலின் பல பெட்டிகளிலிருந்து தீப்பிழம்புகளும் அடர்ந்த புகையும் வெளியேறுவதும், அவசரகால மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், "ராஜ்புரா அருகே உள்ள சராய் பஞ்சாரா ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியபோது, அதன் பொதுப் பெட்டியில் முதலில் தீப்பிடித்தது. அந்தத் தீ, கணநேரத்தில் அருகிலிருந்த மேலும் இரண்டு பெட்டிகளுக்கும் பரவியது" என்றார்.

தீப்பிடித்ததை உணர்ந்தவுடன் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அச்சமடைந்த பயணிகள், பாதிக்கப்பட்ட பெட்டிகளிலிருந்து அவசரா அவசரமாக வெளியேறினர். இந்த விபத்தில் நான்காவது பெட்டியும் லேசான சேதமடைந்தது. இருப்பினும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் பின்னர் மாற்று ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

Summary

A fire broke out in four coaches of the Amritsar-bound Karmabhoomi Express near Rajpura in Punjab’s Patiala district on Friday, triggering panic among passengers. No casualties have been reported so far, as all passengers were safely evacuated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.