சூரத் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு: 3 பேர் கைது
சூரத் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசி அதன் கண்ணாடிகளைச் சேதப்படுத்திய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி....
வந்தே பாரத் - (கோப்புப்படம்)
சூரத் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசி அதன் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம், சூரத் அருகே அக்டோபர் 18ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் உதய்பூர் சிட்டி - சூரத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது உத்ரன் மற்றும் சூரத் இடையே அந்த ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் சி-6 மற்றும் பேன்ட்ரி கார் பெட்டிகளின் இரண்டு ஜன்னல்களின் மூன்று கண்ணாடிகள் சேதமடைந்தன.
இருப்பினும், இதில் பயணிகள் அல்லது பணியாளர்கள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை மாலை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிகாரைச் சேர்ந்த கோலு குமார் சௌத்ரி (22), சந்தேஷ் குமார் (18) மற்றும் மந்தோஷ் முகியா (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விளையாட்டாகவே ரயிலின் மீது கற்களை வீசியதாக மூவரும் தெரிவித்ததாக ரயில்வே காவல் ஆய்வாளர் தினேஷ் யாதவ் தெரிவித்தார். கைதானவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் 153-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக ரயில் தண்டவாளத்திற்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர்.
Summary
Three labourers from Bihar have been arrested for allegedly throwing stones at the Vande Bharat Express near Surat "for fun" and damaging windows, police said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


