முதல்வர் விஜய்யுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு!

முதல்வர் விஜய்யை இஸ்ரோ தலைவர் சந்தித்தது பற்றி...

Isro Chief

முதல்வர் விஜய்யுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு - TNDIPR

Updated On :

தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய்யை இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு அவரை முதல்முறையாக நேரில் சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வருக்கு நாராயணன் விளக்கினார்.

மேலும், முதல்வர் விஜய்க்கு நினைவு பரிசாக ராக்கெட் மாதிரியையும், ’ரெட் பிளானட்’ என்ற புத்தகத்தை நாராயணன் வழங்கினார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுமார் 2 ,233 ஏக்கர் பரப்பளவு இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிலையில், ஏவுதளப் பணிகளுக்கு கடந்த 2024ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த ஏவுதளத்தின் பணிகள் விரைவில் நிறைவடைந்து, அடுத்தாண்டு முதல் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

ISRO Chairman meets Chief Minister Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER