அதிக பயணிகள்! திருவனந்தபுரம் - மங்களூரு வந்தே பாரத் ரயிலின் புதிய சாதனை!
திருவனந்தபுரம் - மங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்துள்ளனர்.

வந்தே பாரத் ரயில் - கோப்புப் படம்
திருவனந்தபுரம் - மங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் 2025 - 26 நிதியாண்டில் 189.35% இருக்கைகள் நிரம்பியுள்ளன.
2025-26 நிதியாண்டில் வந்தே பாரத் ரயிகளில் ஒட்டுமொத்தமாக 99.10% இருக்கைகள் நிரம்பிய விகிதம் பதிவாகியுள்ளது.
நாட்டில் 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் பயணிகளுக்கு சொகுசுப் பயணத்தை வழங்கும் நோக்கத்திலும் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், 2025 - 2026 நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக வந்தே பாரத் ரயிலில் 99.10% இருக்கைகள் நிரம்பிய பயணத்தை பதிவு செய்துள்ளன.
நாட்டில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில், 2026 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹெளரா முதல் காமக்யா வரையிலான இந்த ரயில் சேவையில் 114.54% இருக்கைகள் நிரம்பின.
இதே காலகட்டத்தில், அதிகபட்சமாக திருவனந்தபுரம் - மங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் இருக்கை 189.35% நிரம்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், எண் 20631 கொண்ட வந்தே பாரத் ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் இடையே பயணிக்கையில் 174.77% இருக்கைகள் நிரம்பியிருந்தன. மறுமார்க்கத்தில் வண்டி எண் 20632 கொண்ட வந்தே பாரத் ரயிலில் அதிகபட்சமாக 189.35% இருக்கைகள் நிரம்பியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Thiruvananthapuram-Mangaluru Vande Bharat train has recorded the highest passenger occupancy at 189.35%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


