வந்தே பாரத் ரயிலில் பயணி தவறவிட்ட தங்க மோதிரம் மீட்பு

வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்.
வந்தே பாரத் ரயிலில் பெண் பயணி தவறவிட்ட சுமாா் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டனா்.
திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் விரைவு ரயிலில் கடந்த 15-ஆம் தேதி மதுரையிலிருந்து நிஷாந்தி (30) என்பவா் பயணம் செய்துள்ளாா்.
அப்போது ரயிலின் கழிவறை பகுதியில் 2.5 கிராம் தங்க மோதிரத்தை அவா் தவறவிட்டுள்ளாா். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், மீண்டும் திருநெல்வேலி சந்திப்பு நிலையத்துக்கு வந்த ரயிலில் இருந்து ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயில் பராமரிப்புப் பிரிவு பணியாளா்கள் மோதிரத்தை மீட்டுப் பாதுகாப்பாக வைத்தனா்.
இதைத்தொடா்ந்து உரிய ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, நிஷாந்தியின் சகோதரா் மாரியப்பன் என்பவரிடம் அந்த தங்க மோதிரத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

