வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

நெல்லையில் ரயில்வே பாதுகாப்புப் படை ஏ.எஸ்.ஐ. மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே பாதுகாப்பு படை ஏ.எஸ்.ஐ. புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பலி

Updated On :

திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே பாதுகாப்பு படை ஏ.எஸ்.ஐ. புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் சக்தி நகரைச் சோ்ந்தவா் சரவணன்(53). ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் பிரிவில் துணை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை சரவணன் வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக புறப்பட்டபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக சந்திப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER