தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

தீபாவளிக்கு வீடுகளில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல் குமார் - From Video Grab

Updated On :

சென்னை: தீபாவளியன்று எந்த ஒரு மின்வெட்டும் இல்லாமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்துறைக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

மேலும், அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால்தான் கைது செய்யப்பட்டுள்ளது, வீட்டில் சென்று பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதற்காக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பயிர்க் கடன் தள்ளுபடி விரைவாக முதல்வர் உத்தரவுக்கு இணங்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுகள் எட்டப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்.

அன்பில் மகேஷ் விசாரணை விவகாரம்? குறித்து கேட்டதற்கு,

எல்லோருக்கும் ஆதாரம் உள்ளது. அன்பில் மகேஷ் கலெக்ஷன் செய்து யார் எவ்வளவு கொடுத்தார், கட்சி நிதியை ஒவ்வொரு பள்ளிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்புக்காக எவ்வளவு கொடுத்தார்கள்.

இது ஒரு நாளில் நடைபெறும் பிரச்சனை இல்லை, இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் வசூல், ஆதாரபூர்வமாக கல்வி நிறுவனங்களில் இருந்து புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் யாருக்கு கொடுத்தார்கள் அதற்கான பென்ட் டிரைவ் உள்ளது. ஆதாரம் உள்ளது. இதில் முகாந்திரம் இருக்கிறது. இது பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் இருப்பதால்தான் வழக்கு பதிவு செய்யப்படும் அவர்கள் ஊழல் செய்யவில்லையா.? மக்கள் பணத்தை கொள்ளையடித்துதான் இந்த இடத்தில் இருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு குறித்துப் பேசிய அமைச்சர், விலைவாசி உயர்வு மழைக்காலங்களில் ஏற்படுவதுதான், விவசாய பொருள்கள் விலை உயர்ந்துள்ளது, இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. விலைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வரும் தேர்தலில் திமுகவால் வெற்றிபெற முடியாது.. ஏற்கனவே வென்ற தொகுதிகளில்கூட மீண்டும் 10 தொகுதி கூட ஜெயிக்க முடியாது, மீண்டும் எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் தவெக கூட்டணி வெற்றி பெறும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்றும் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

அதிகப்படியான பேருந்துகளை இயக்குவதற்கு அத்துறை அமைச்சர் ஒரு மாதமாக திட்டமிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர், செயலி மூலமாக பேருந்து இயக்கத்தை தெரிந்து கொள்ளவும், ஒருங்கிணைத்து கட்டண கொள்ளை நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இந்த தீபாவளியில் அதிக மக்கள் பேருந்துகளில் செல்வதற்கான வழிவகை செய்யப்படும். புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு கூடுதலாக்கப்படும்.

தீபாவளியன்று எந்த ஒரு மின்வெட்டும் இல்லாமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு ஆய்வு செய்து தேவையில்லாமல் மின் தடை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் மக்கள் புகார் அளிக்கலாம்.

கூட்டணி கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது, அனைவரும் சேர்ந்து மக்களுக்கு நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறோம் என்றார்.

Summary

Will there be electricity in homes for Diwali? Minister Nirmal Kumar provides clarification

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.