தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்

ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41க்கு கொள்முதல் செய்யும் டெண்டரை அமைச்சர் நிர்மல் குமார் ரத்து செய்துள்ளது குறித்து...

minister Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Updated On :

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் கையிருப்பில் உள்ளதாகவும், அதிக விலைக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (அக். 27) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பதிவிட்டுள்ளதாவது:

''ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 37 முதல் 41-க்கு கொள்முதல் என்ற டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

இன்று டெண்டர்களைத் திறந்து பார்த்தபோது, ​​பல விற்பனையாளர்கள் மிக அதிக விலையைக் கோரியுள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரம் எங்களிடம் போதுமான அளவில் இருப்பதாலும், அடுத்த கோடை காலத்திற்காக மின்சாரம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாலும், இந்த விலைகள் நியாயமற்றவை.

இதற்கிடையில், வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை நாங்கள் வெளியிடவுள்ளோம்.

எனவே, இனி அதிக விலையில் எரிவாயு (மின்சார உற்பத்திக்கான எரிபொருள்) கொள்முதல் செய்யப்படமாட்டாது'' எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Sufficient electricity in stock Tender for high-cost procurement cancelled minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.