பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!
சென்செக்ஸ் 8.08 புள்ளிகள் சரிந்து 73,598.67 ஆகவும், நிஃப்டி 3.45 புள்ளிகள் சரிந்து 22,749.75 ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம் - IANS
மும்பை: உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்த வார இறுதியில் வெளியாகவுள்ள அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கொள்கை முடிவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டதால், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ், காலாவதி நாளில் நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் இந்திய குறியீடுகள் சிறிதளவு சரிந்து முடிவடைந்தன.
பங்குச் சந்தை முடிவில், சென்செக்ஸ் 8.08 புள்ளிகள் சரிந்து 73,598.67 ஆகவும், நிஃப்டி 3.45 புள்ளிகள் சரிந்து 22,749.75 ஆக நிலைபெற்றது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.8 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 2.7 சதவீதமும் உயர்ந்தன.
துறைவாரியாக, மீடியா குறியீடு 3.6%, ரியல்டி மற்றும் பார்மா தலா 2%, மற்றும் ஆட்டோ குறியீடு 1.4% உயர்ந்தன. அதே சமயம், ஐடி, ஆயில் & கேஸ், தனியார் வங்கி ஆகிய துறைகள் தலா 0.5% சரிந்தன.
டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், பார்தி ஏர்டெல், ட்ரென்ட், பிஎஸ்இ லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, கோல் இந்தியா, டிசிஎஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
குஜராத்தில் மூன்று புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்காக ரூ.1,250 கோடி முதலீடு செய்வதாக டிரான்ஸ்ஃபார்மர்ஸ் அண்ட் ரெக்டிஃபையர்ஸ் (இந்தியா) நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 5% உயர்ந்தன. அதே சமயம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து ரூ.91.78 கோடி மதிப்பிலான ஒப்பந்தக் கடிதத்தைப் பெற்றதைத் தொடர்ந்து ஹைவே இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் 20% உயர்ந்தன.
நேட்டோ வாடிக்கையாளரிடமிருந்து ரூ.973 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றதைத் தொடர்ந்து சிக்மா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பங்குகள் 5% உயர்ந்தன. பங்குகளைத் திரும்பப் பெருவதாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ஜெனஸ் பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் பங்குகள் 3% லாபம் ஈட்டியது.
ஹெச்எஸ்பிசி வங்கி டால்மியா பாரத் பங்கின் தரத்தை 'ஹோல்ட்' எனத் தரம் குறைத்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 6% சரிந்தன. 2ஆம் காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் சரிந்ததைத் தொடர்ந்து ஆர்இசி நிறுவனத்தின் பங்குகள் 3% சரிந்தன.
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவில் ரூ. 95.19 உடன் ஒப்பிடுகையில், டாலர் ஒன்றுக்கு 7 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிலைபெற்றது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 1,462.49 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
டால்மியா பாரத், சுமிடோமோ, ஆர்இசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ், டாபர் இந்தியா, ஐஆர்சிடிசி, சிஇஎஸ்சி, பிஐ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட சுமார் 180 பங்குகள் 52 வாரக் குறைந்தபட்ச அளவை எட்டியது.
Summary
Indian benchmark indices ended almost unchanged amid volatility on the F&O expiry day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


