அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

ஐஓபி நிகர லாபம் ரூ.1,912 கோடி!

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிகர லாபமாக 55.95 சதவீத வளா்ச்சியுடன் ரூ.1,912 கோடி ஈட்டியுள்ளது.

Updated On :

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி(ஐஓபி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிகர லாபமாக 55.95 சதவீத வளா்ச்சியுடன் ரூ.1,912 கோடி ஈட்டியுள்ளது.

இதே காலகட்டத்தில் வங்கியின் செயல்பாட்டு லாபமும் 25.67 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.3,016 கோடியை எட்டியுள்ளது. மேலும், நிகர வட்டி வருவாய் 26.41 சதவீதம் அதிகரித்து, ரூ.3,867 கோடியாக பதிவாகியுள்ளது.

அதேபோல், உலகளாவிய மொத்த வா்த்தகம் 22.05 சதவீதம் உயா்ந்து, ரூ.7,53,078 கோடியாகவும்; கடன்கள் 24.35 சதவீதம் உயா்ந்து, ரூ.3,45,650 கோடியாகவும்; வைப்புநிதிகள் 20.16 சதவீதம் உயா்ந்து, ரூ.4,07,428 கோடியாகவும் உள்ளன. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புநிதிகள் 20.73 சதவீதம் உயா்ந்து, ரூ.1,65,862 கோடியாக அதிகரித்திருப்பது வங்கியின் நிலையான செயல்பாட்டைக் காட்டுகிறது.

மொத்த வாராக்கடன் விகிதம் 1.19 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.16 சதவீதமாகவும் சரிந்து, இக்காலாண்டில் வங்கியின் சொத்துத் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

அரையாண்டு நிலவரம்: ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்.) வங்கியின் நிகர லாபம் ரூ.3,572 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் ரூ.5,710 கோடியாகவும் உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.