தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் விடுதலை!மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!அக். 23 முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில்!வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!

விஷால் மெகா மார்ட் Q2 லாபம் 3.65% அதிகரிப்பு!

விஷால் மெகா மார்ட் அதன் லாபம் 3.65 சதவீதம் அதிகரித்து ரூ. 157.88 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

Vishal Mega Mart - விஷால் மெகா மார்ட்

Updated On :

புதுதில்லி: மலிவு விலை சில்லறை விற்பனையாளரான விஷால் மெகா மார்ட், 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 3.65 சதவீதம் அதிகரித்து ரூ. 157.88 கோடியாக இருப்பதாக அறிவித்தது. இதுவே, கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 152,31 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

2027 நிதியாண்டின் செப்டம்பர் வரையான காலாண்டில், அதன் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் 14.5 சதவீதம் அதிகரித்து ரூ. 3,436.92 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 3,001.67 கோடியாக இருந்தது.

பண்டிகை கால கொள்முதல், மூன்றாம் காலாண்டிற்கு மாற்றப்பட்டதாலும், இந்தக் காலாண்டில் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் இதர செலவினங்கள் குறைந்தபோதிலும், நிறுவனம் நிகர லாபத்தில் வளர்ச்சி எட்டப்பட்டதாக தெரிவித்தது.

மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் செலவு 15.3 சதவீதம் அதிகரித்து ரூ. 3,225.61 கோடியாக இருந்தது.

செப்டம்பர் 2026 நிலவரப்படி, 582 நகரங்களில் 844 கடைகளை இயக்கி வந்துள்ளது விஷால் மெகா மார்ட்.

விஷால் மெகா மார்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில், பங்கு ஒன்றுக்கு ரூ. 89.90 ஆக இருந்தது.

Summary

Vishal Mega Mart on Wednesday reported a 3.65 per cent increase in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.