எச்.சி.எல். டெக் 2வது காலாண்டு லாபம் 21% உயர்வு!
எச்.சி.எல். டெக் நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2 வது காலாண்டில் 21.18 சதவீதம் அதிகரித்து ரூ. 5,132 கோடியாக உள்ளது.

எச்.சி.எல். டெக்
புதுதில்லி: செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் கிடைக்க பெற்ற வளர்ச்சி மற்றும் குறைந்த வரிச் செலவுகள் காரணமாக, எச்.சி.எல். டெக் நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் நிதியாண்டின் 2 வது காலாண்டில் 21.18 சதவீதம் அதிகரித்து ரூ. 5,132 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.
நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்ட எச்.சி.எல். டெக் நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சி குறித்த தனது கணிப்பை, முன்பு 1 முதல் 4 சதவீதமாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது 2.5 முதல் 4 சதவீதமாக மாற்றியமைத்துள்ளது.
வலுவான முன்பதிவு, ஒப்பந்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவையில் உள்ள வளர்ச்சி வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 4,235 கோடி நிகர லாபம் ஈட்டியது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், கடந்த ஆண்டின் 2 வது காலாண்டிலிருந்த ரூ. 31,942 கோடியிலிருந்து 11.5 சதவீதம் அதிகரித்து ரூ. 35,620 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த வருவாயில் சுமார் 90 சதவீதம் அதன் சேவை வணிகம், பல்வேறு தொழில் பிரிவுகள் மூலம் ஆண்டுக்கு ஆண்டு 4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
எச்.சி.எல். மென்பொருள் வருவாய் 11.2 சதவீதம் சரிந்தது, அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக விஜயகுமார் தெரிவித்தார். இதற்கிடையில், எச்.சி.எல். மென்பொருளின் வருவாய் ரூ. 2,826 கோடியிலிருந்து ரூ. 2,709 கோடியாகக் குறைந்தது. கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், லாபம் மற்றும் வருவாய் முறையே 11 சதவீதம் மற்றும் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் நிர்வாகக் குழு பங்குக்கு ரூ. 12 இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
HCLTech reported a 21.18 per cent rise in consolidated net profit to Rs 5,132 crore for the July-September quarter of FY27.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


