
டி-மார்ட் நிறுவனத்தின் 2வது காலாண்டு வருவாய் 18% உயர்வு!
டி-மார்ட் அதன் செயல்பாட்டு வருவாய் 18.4 சதவீதம் அதிகரித்து ரூ.19,206.18 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டி-மார்ட்
புதுதில்லி: 'டி-மார்ட்' சில்லறை விற்பனைக் சங்கிலியை நிர்வகித்து வரும் 'அவென்யூ சூப்பர் மார்ட்ஸ்' நிறுவனம், செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த 2 வது காலாண்டில், அதன் செயல்பாடு வருவாய் 18.4 சதவீதம் அதிகரித்து ரூ. 19,206.18 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.16,218.79 கோடியாக இருந்தது. செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.19,206.18 கோடியாக இருந்தது.
தமாணி குடும்பத்தினரால் நடத்தப்படும் இந்த சில்லறை விற்பனைச் சங்கிலியின் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 518 ஆக இருந்தது.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், டி-மார்ட்டின் வருவாய் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.18,343.49 கோடியாக இருந்தது.
Summary
Avenue Supermarts, which owns and operates the retail chain D-Mart, reported an 18.4 per cent rise in revenue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






