
ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் ஜந்தர் மந்தர் நோக்கிய பேரணி நடைபெற்று வருகிறது...
தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் நேஹா போரா, கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்பு... - எக்ஸ்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் ஜந்தர் மந்தரை நோக்கிய பேரணித் தொடங்கியுள்ளது.
எஸ்ஐஆர் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் இன்று (அக்.3) மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், அகில இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஜந்தர் மந்தர் நோக்கி இன்று மதியம் தொடங்கிய பேரணியில், ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா, மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஆர்வலர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஞானேஷ் குமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி நடைபெறும் இந்தப் பேரணியில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். மேலும், ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், கைது செய்யப்பட்ட பிறகு காவல் துறையினர் தங்களைத் தாக்குவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தில்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் முதல்வர் அதிஷி, நேஹா போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் எம்.ஏ. பேபி உள்பட சுமார் 700 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
rally heading towards Jantar Mantar in Delhi has commenced, demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





