தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

ஞானேஷ் குமாருக்கு எதிரான மசோதா: திமுக ஆதரவு!

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க திமுக முடிவு செய்துள்ளது.

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க திமுக முடிவு செய்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டன தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்காத நிலையிலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பாஜகவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் எந்தவொரு விவகாரத்திலும், ​​திமுக துணையாக நிற்கும் என்று கூறினார்.

அவர் பேசுகையில், ”நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை. அது வேறு விஷயம். ஆனால், சித்தாந்த ரீதியாக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். நாடாளுமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் ஆதரிப்போம். ஏனெனில், இதுதொடர்பாக எங்கள் தலைவர் முன்னரே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ” என்று தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், அவர் தொடர்ந்து அப்பதவியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை என்றும் சில நாள்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Bill against Gyanesh Kumar: DMK extends support!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.