
உலகில் இரு நாடுகளில் மட்டும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?
இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம் என்ற நிலை நீடிக்கிறது.

திருமணம் - ஐஏஎன்எஸ்
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளிலும், திருமண உறவில் விரிசல் ஏற்படும்போது சட்டப்படி விவாகரத்துப் பெற்றுக் கொள்ள வழிவகை உள்ளது. ஆனால், பிலிப்பைன்ஸ் மற்றும் வாடிகன் சிட்டி என இவ்விரு பகுதிகளில் மட்டும் இதிலிருந்து விதிவிலக்காக உள்ளது.
பிலிப்பின்ஸில் பொதுவான விவாகரத்து சட்டம் என்பது இல்லை. ஆனால், முஸ்லிம் தனிநபர் சட்டத்தில், விவாகரத்துக்கு சில வழிவகைகள் உள்ளன.
வாட்டிகனின் கத்தோலிக்க திருச்சபைச் சட்டக் கட்டமைப்பின்படி, செல்லுபடியாகும் மற்றும் முழுமைபெற்ற ஒரு திருமண உறவை, மரணத்தைத் தவிர வேறு எந்த மனித அதிகாரத்தாலும் பிரிக்க முடியாது; இருப்பினும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பிரிந்து வாழ்தல், திருமணத்தை செல்லாததாக அறிவித்தல் மற்றும் வேறு சில வகையான விவாகரத்து முறைகளுக்குத் திருச்சபைச் சட்டம் வழிவகுக்கிறது.
அதிகாரப்பூர்வ தகவல்கள் சொல்வது என்னவென்றால்,
பெரும்பாலான திருமணமான தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்க பொதுவான விவாகரத்து சட்டம் எனப்து பிலின்பின்ஸில் இல்லை. அதற்குமாறாக, பிலிப்பின்ஸ் குடும்ப சட்டம், தம்பதிகள் பிரிந்து வாழ, திருமணத்தை ரத்து செய்ய மற்றும் செல்லாததாக்குவதாக அறிவிக்க சில சட்ட வழிகளை கொண்டிருக்கிறது.
அப்படியும், சட்டப்படி பிரிந்திருந்தாலுமே, திருமணம் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமாகாதாம். அவர்கள் பிரிந்து வாழ மட்டுமே அனுமதி, அவர்களுக்குள் இருக்கும் திருமண பந்தம் தொடரும்.
ஒருவேளை, விவாகரத்து வேண்டும் என்று தம்பதி விரும்பினால், நீதிமன்றத்தை நாடி உரிய காரணங்களைக் கொடுக்க வேண்டும். அங்கு திருமணத்தை ரத்து செய்வது அவ்வளவு எளிய காரியமல்ல. தம்பதியருக்கு சில வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கி அதன்படியே, அவர்கள் பிரிய வாய்ப்பளிக்கும். ஆனாலும் கூட, அது விவாகரத்துக்கு இணையானதல்ல..
வாடிகனைப் பொறுத்தவரை.. திருமணம் என்பது...
வாடிகன் நகரைப் பொறுத்தவரை, திருமணம் என்பது பிரிக்க முடியாத ஒரு பந்தம். தாய், தந்தை, சகோதரர், சகோதரை பிரிக்க சட்டம் இல்லை என்பது போலவே அங்கு திருமணத்தையும் பிரிக்க முடியாது.
கிறிஸ்தவ திருமணங்கள் என்பது ஒற்றுமையான, பிரிக்க முடியாததாகக் கருதப்படுகிறது. எந்த தனிமனித சக்தியாலும் எந்த காரணத்தாலும் திருமணத்தை பிரிக்க முடியாது, மரணம் ஒன்றுமட்டுமே சாத்தியம். இதனால்தான், உலகிலேயே விவாகரத்து வழங்கப்படாத பகுதிகளில் ஒன்றாக வாடிகன் நகரம் விளங்குகிறது.
திருச்சபைச் சட்டத் தொகுப்பின் 1142-வது விதியின்படி, தம்பதியரிடையே உடலுறவு மூலம் முழுமைபெறாத திருமணத்தை, தகுந்த காரணத்தின் அடிப்படையில் ரோமானிய பேராலய தந்தையால் கலைக்க முடியும்.
கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியர் பிரிந்து வாழ அனுமதிக்கிறது. ஆனால், பிரிந்து வாழ்வதால் அவர்களுக்கு விவாகரத்து வழங்குவதை அனுமதிக்கவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் ஒன்றாகத்தான் வாழ வேண்டும் என்றும் வற்புறுத்துவதில்லை.
எனவே, பிலிப்பின்ஸ் மற்றும் வாடிகன் நகரில், விவாகரத்து என்பது சட்டப்படி குற்றம் என்ற நிலையே நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




