தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!

மகனை சமாளிக்க முடியவில்லை! தத்தெடுத்ததை ரத்து செய்யக் கோரி பெண் வழக்கு! பின்னணி என்ன?

மகனை சமாளிக்க முடியவில்லை என்று கூறி, அவரை தத்தெடுத்ததை சட்டப்படி ரத்து செய்யக் கோரி பெண் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

law

சட்டம் - கோப்புப் படம்

Published On :

நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர், 8 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்து வரும் மகனை மீண்டும் அரசு அல்லது தனியார் காப்பகத்தில் ஒப்படைத்து தத்தெடுத்ததை சட்டப்படி ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் பெண்ணுடன் அவர் தத்தெடுத்து வளர்த்து வரும் 14 வயது மகன் இருக்கிறார். தானும் கணவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 6 வயது சிறுவனை தத்தெடுத்து வளர்த்ததாகவும், தற்போது கணவர் இறந்துவிட்ட நிலையில், மகனை சமாளிக்க முடியவில்லை என்று கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், கடந்த 2021-இல் தனது கணவர் காலமானதைத் தொடர்ந்து, தான் தற்போது தனியாக மகனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவனுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சற்று அறிவுசார் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், சிறுவனின் முறையற்ற நடத்தை, ஆக்ரோஷமான செயல்பாடுகள், திருடும் பழக்கம் ஆகியவற்றை தன்னால் சமாளிக்க முடியாமல் இருப்பதாகவும் அந்தப் பெண் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவனது இத்தகைய நடத்தை சிக்கல்கள் காரணமாக அவன் பல பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், மத்திய தத்தெடுப்பு வள அதிகாரிகளும் பதிலளிக்குமாறு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்த பிறகு, அந்த தத்தெடுப்பு நடவடிக்கையை சட்டப்படிதான் ரத்து செய்ய முடியும், அதுவும் நீதிமன்றம் தலையிட்டுத்தான் ரத்து செய்ய முடியும் என்பதால், அந்தப் பெண் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.