
புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!
புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகத்தை வரும் 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்..
காந்தி நினைவு அருங்காட்சியகம்
ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் முறையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் மின்னொளியில் மிளிரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை காந்தி அருங்காட்சியகத்தை வரும் 28ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.
மதுரை காந்தி அருங்காட்சியகம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வந்த நிலையில், வரும் 28ஆம் தேதி மக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.
மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழக முதல்வர் விஜய், காந்தி அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காந்தி அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
அருங்காட்சியகத்தின் பழமை மாறாமல் சுவர்கள் மற்றும் மேல்தளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், டிஜிட்டல் புகைப்படங்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழ் மொழிபெயர்ப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திறப்பு விழா தள்ளிப்போனது. தற்போது வரும் 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு காந்தி அருங்காட்சியகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அருங்காட்சியகம் முழுவதும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் மின்னொளியில் மிளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ள காந்தி அருங்காட்சியகம், ஒளி-ஒலி மற்றும் மின்னணு காட்சிகளுடன் மக்களை கவரும் வகையில் தயாராகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





