
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்: மைதானங்கள் குறித்த விவரங்கள் வெளியீடு
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ரா.கண்மணிதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2026 ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் 9 முதல் 22 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளன.
வரும் 9 ஆம் தேதி பள்ளி மாணவிகளுக்கான தடகளம், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், வாலிபால், கைப்பந்து போட்டிகள் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்திலும், இறகுப் பந்து மாநகராட்சி கிளப்பிலும், கிரிக்கெட் நீலாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் புனிதபால் மேல்நிலைப் பள்ளியிலும், மேசைப் பந்து புனிதபால் மேல்நிலைப் பள்ளியிலும், கேரம் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்திலும், கோ-கோ சௌடேஸ்வரி மெட்ரிக். பள்ளியிலும், செஸ் செயின் ஜான்ஸ் மெட்ரிக். பள்ளியிலும், யோகாசனம் சாய்-உள் விளையாட்டு அரங்கிலும் நடைபெற உள்ளன.
வரும் 11 ஆம் தேதி கபடி மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்திலும், வளைகோல்பந்து செயின் மேரீஸ் பள்ளியிலும், 13 ஆம் தேதி நீச்சல் போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்திலும் நடைபெறவுள்ளன.
பள்ளி மாணவா்களுக்கு தடகளம் வரும் 9 ஆம் தேதி மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்திலும், 10 ஆம் தேதி இறகுப் பந்து மாநகராட்சி கிளப்பிலும், கிரிக்கெட் கொங்கு மெட்ரிக். பள்ளியிலும், கால்பந்து சிறுமலா் மேல்நிலைப் பள்ளியிலும், சிலம்பம் வாலிபால், மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்திலும், கைப்பந்து ஜெயராணி மெட்ரிக் பள்ளியிலும், கோ-கோ சௌடேஸ்வரி மெட்ரிக் பள்ளியிலும், செஸ் செயின் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியிலும், யோகாசனம் சாய் உள்விளையாட்டு அரங்கிலும், மேசைப்பந்து புனிதபால் மேல்நிலைப் பள்ளியிலும், கேரம் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்திலும், 12 ஆம் தேதி கபடி, 13 ஆம் தேதி நீச்சல் போட்டிகள் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்திலும், 15 ஆம் தேதி கூடைப்பந்து சிறுமலா் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
இதேபோல், கல்லூரி மாணவா், மாணவிகள், பொதுப் பிரிவினா்( ஆண்கள், பெண்கள்), அரசு ஊழியா்கள் பிரிவில் ஆண்கள், பெண்கள் என போட்டி நடைபெறும் இடங்கள் நடக்கும் இடங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளா் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





