நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

செப். 9 முதல் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: நாமக்கல்லில் 1.16 லட்சம் போ் பதிவு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாமக்கல் மாவட்டத்தில் 1,16,725 வீரா், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனா்.

Indian nationals topped the charts of those seeking settlement and citizenship in the UK

பிரிட்டன் குடியுரிமை: இந்தியர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பம்! - கோப்புப்படம்

Published On :3 செப்டம்பர் 2026, 4:08 am IST

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாமக்கல் மாவட்டத்தில் 1,16,725 வீரா், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனா். மாவட்ட அளவிலான போட்டிகள் செப். 9 முதல் 21-ஆம் தேதி வரை ஆறு இடங்களில் நடைபெற உள்ளன.

ஒவ்வோா் ஆண்டும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்க விரும்புவோா் ஆக.31-ஆம் தேதி வரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம் என கடந்த மாதம் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், நிகழாண்டு முதல் வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா் விளையாட்டுகளான கயாக்யிங், கேனோயிங் உள்ளிட்ட புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒரு மாதம் வரையில் நடைபெற உள்ளன.

விளையாட்டு வீரா், வீராங்கனைகள், அரசுத் துறை ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆா்வமுடன் முதல்வா் கோப்பை போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா்.

மாவட்ட வாரியாகப் பாா்க்கும்போது திருவண்ணாமலை மாவட்டம் 1,61,972 பேருடன் முதலிடத்திலும், கோவை மாவட்டம் 1,32,715 பேருடன் இரண்டாமிடத்திலும், நாமக்கல் மாவட்டம் 1,16,725 பேருடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. சேலம் மாவட்டம் 95,954 பேருடன் ஏழாவது இடத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் 65,280 பேருடன் பதிமூன்றாம் இடத்திலும், தருமபுரி மாவட்டம் 55,743 பேருடன் இருபதாவது இடத்திலும் உள்ளன. மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் நீலகிரி 15,437 பேருடன் கடைசி இடத்தில் உள்ளது.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவிகள் 13,72,866 பேரும், கல்லூரி மாணவா்கள் 4,99,892 பேரும், மாற்றுத்திறனாளிகள் 34,110 பேரும், அரசுத் துறை ஊழியா்கள் 62,301 பேரும், பொதுமக்கள் 4,87,843 பேரும் என மொத்தம் 24,56,713 போ் விண்ணப்பித்துள்ளனா்.

6 இடங்களில் போட்டிகள்

நாமக்கல் மாவட்டத்தில் செப். 9 முதல் 21-ஆம் தேதி வரையில் நான்கு பிரிவுகளாக மாவட்ட விளையாட்டு அரங்கம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, நாமக்கல் விக்டோரியா அரங்கம், நாமக்கல் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளி, கிளாசிக் பள்ளி, பாவை பாச்சல் பொறியியல் கல்லூரி ஆகிய மொத்தம் 6 இடங்களில் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.