தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சரிவு! சிவப்பு எச்சரிக்கையா?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு.

கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 5:45 pm IST

மும்பை: வலுவான டாலர் மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்டவையால், ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிலைபெற்றது.

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்கள் முதலீடுகளைத் தவிர்க்க முற்படுகின்ற நிலையில், கச்சா எண்ணெய் விலை, பீப்பாய ஒன்றுக்கு 95 அமெரிக்க டாலராக மீண்டும் உயர்ந்துள்ளதாலும், டாலர் குறியீட்டெண் 99.80 என்ற அளவில் நிலைகொண்டிருப்பதாலும், ரூபாயின் வீழ்ச்சியை ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் அதிகரித்துள்ளதால், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாயை இது உயர்த்தியதுடன், டாலரின் மதிப்பை வலுப்படுத்தவும் செய்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 94.97 ஆக வர்த்தகத்தைத் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 94.83 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 94.99 வரையிலும் சென்றது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய வர்த்தக நாள் முடிவை விட 2 காசுகள் சரிந்து ரூபாய் மதிப்பு ரூ. 94.97 ஆக நிலைபெற்றது.

Summary

The rupee traded in a tight range and settled for the day at 94.97 on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.