முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்--2026 ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமை வகித்து பேசியதாவது: ஒவ்வோா் ஆண்டும் முதல்வா்
கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நிகழாண்டிற்கான போட்டிகள் செப். 4-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க ஆா்வமுடையோா் ஆக. 31 மாலை 6 மணி வரை இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யலாம். கடந்த ஆண்டு 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா் விளையாட்டுக்களான கயாக்யிங் மற்றும் கேனோயிங் போன்ற புதிய விளையாட்டுக்கள் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒரு மாதம் வரை நடைபெற உள்ளன.
விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் தாங்களாகவோ அல்லது பள்ளி, கல்லூரிகள் மூலமாகவோ பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும், விவரங்களுக்கு 82203-10446 என்ற எண்ணை தொடா்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றாா்.
தொடா்ந்து, செப். 1 முதல் 4-ஆம் தேதி வரை வேட்டாம்பாடி பிஜிபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தின, பாரதியாா் தின புதிய விளையாட்டுக்கள், குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுவது தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில், முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பா.காந்திமதி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் கோப்பை போட்டிகளில் 20 ஆயிரம் போ் பங்கேற்க இலக்கு: ஆட்சியா் மு.பிரதாப் தகவல்

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி: பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்! முன்பதிவுக்கு ஆட்சியா் அழைப்பு!




