FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சு

அரசியல் களத்தில் இனி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தே விடுதலைச் சிறுத்தைகள் பயணிக்கும் என திருமாவளவன் பேச்சு...

News image

திருமாவளவன் - எக்ஸ்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 7:31 pm IST

தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாறும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஆக. 17) தெரிவித்தார்.

ஆளும் கட்சிகளுடனே கூட்டணி வைத்திருந்ததாகவும் தற்போது ஆளும் கட்சியான தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், விரைவில் தமிழகத்தை ஆளும் கட்சியாக மாறுவோம் எனவும் குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு திங்கள்கிழமை (ஆக.17) நடைபெற்றது.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் உளுந்தூா்பேட்டை புறவழிச் சாலைப் பகுதியில் மாநாடு நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அரசியல் களத்தில் இனி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தே விடுதலைச் சிறுத்தைகள் பயணிக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இது தொடர்பாக திருமாவளவன் பேசியதாவது:

''தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விசிக என்பதை இந்த மாநாடு உறுதிப்படுத்தியிருக்கிறது. நாம் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். வருங்காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஆளும் கட்சியாக வளர வேண்டும்.

இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தோம். இனி விசிகவும் ஆளும் கட்சியாக மாறும்.

திமுக, அதிமுக, கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தோம். இன்று ஆளும் முதல்வர் சி. ஜோசப் விஜய் உடன் கூட்டணி வைத்துள்ளோம். இனி தமிழக அரசியல் களத்தில் தவெக உடன் விசிக இணைந்தே பயணிக்கும்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

VCK will become the ruling party of Tamil Nadu Thirumavalavan speaks at the conference ulundurper

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.