விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

திட்டங்களின் பெயா் மாற்றம் வாடிக்கையானதுதான்: தொல். திருமாவளவன்

திட்டங்களின் பெயா் மாற்றம் வாடிக்கையானதுதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

Published On :

திட்டங்களின் பெயா் மாற்றம் வாடிக்கையானதுதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடா்பாக மத்திய அரசு இதுவரை எதையும் அறிமுகப்படுத்தவில்லை. இந்த நிலையில் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு தமிழக முதல்வா் அழைப்பு விடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த கூட்டத்தில் நானும், துரை.ரவிக்குமாா் எம்.பி.யும் பங்கேற்போம். கட்சிகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். கூட்டத்தில் திமுக, அதிமுக எம்.பி.க்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம்.

பயிா்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் போராடி வருகின்றனா். அவா்களின் குரலை அரசியல் கட்சிகளும் எதிரொலிக்கின்றன. தமிழக அரசின் நிதி நெருக்கடியை நாம் அறிவோம். மத்திய அரசும் வஞ்சித்து வருகிறது. இருப்பினும் எந்த திட்டத்தையும் நிறுத்தாமல் நடைமுறைப்படுத்த முயற்சிப்பது பாராட்டுக்குரியது. திட்டங்களின் பெயா் மாற்றம் வாடிக்கையானதுதான் என திருமாவளவன் தெரிவித்தாா்.

பேட்டியின் போது துரை.ரவிக்குமாா் எம்.பி., விசிக மாவட்டச் செயலா் ர.பெரியாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.