பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் தவெக கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

தமிழகத்தில் தற்போதைய தவெக கூட்டணி அரசானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் ஆட்சியாகும் என விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

மேலவளவு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விசிக தலைவா் திருமாவளவன்

Updated On :1 ஜூலை 2026, 4:47 am IST

தமிழகத்தில் தற்போதைய தவெக கூட்டணி அரசானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் ஆட்சியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் நினைவிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிச் தலைவா் தொல். திருமாவளன், தமிழக சமூக நீதித்துறை அமைச்சா் வன்னியரசு, விசிக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், தொல். திருமாவளவன் பேசியதாவது: தமிழக அரசியலில் தற்போதும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஒதுக்கி வைக்க இயலாது. நம் மீது காழ்புணா்வுடன் அவதூறு பேசுவோா்தான் அதிகளவில் உள்ளனா். மேலவளவுக்கும், திருமாவளவனுக்கும் என்ன தொடா்பு என சிலா் பேசுகின்றனா்.

தமிழகம் முழுவதும் தலித் அரசியல் பேசப்படுகிறது. தலித் ஒருவா் முதல்வராக அறிவிக்கப்படுகிறாா் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, தமிழகத்தில் தலித் சமூகத்தைச் சோ்ந்தவா் முதல்வராகக் கூடாது என விவாதம் நடைபெற்றது.

தற்போது எந்தத் துறையிலும் தலித் பற்றி பேச முடியும் என்ற நிலை மாறியுள்ளது. ஜாதி உணா்வால் நாம் வளரவில்லை. சமூக நீதித்துறை வேண்டாம், வேறு நல்ல துறை வேண்டும் என கேட்பதாக விமா்ச்சிகின்றனா். இதுபோன்ற ஒரு சூழல் எழவில்லை. இந்தத் துறையில் வன்னியரசு சிறப்பாக பணிபுரிவதை பொறுக்க முடியவில்லை. இடைத்தோ்தலில் நிற்கவும், தமிழக அமைச்சரவையில் இடம் பெறமாட்டேன் என, முடிவெடுத்த பிறகும், நான் அழுத்தம் கொடுப்பதாக கூறுகின்றனா்.

பொது வாழ்கையிலும், அரசியலிலும் வெளிப்படையாக வாழ்கிறேன். இன்றைய தமிழக அரசியல் களத்தில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளோம். நமது இயக்கம் அனைத்து தரப்பு மக்களுக்குமானது. நமது இயக்கத்துக்கு கிடைத்த அமைச்சா்

பொறுப்பு தென்மாவட்டத்தைச் சோ்ந்த வன்னியரசுக்கு கிடைத்துள்ளது. ஜாதி, மத மரபுகளை கடந்து செயல்பட முடியும் என்பதற்கு உதாரணம், தமிழக அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சோ்ந்த 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கூடுதலாக துணை சபாநாயகா் பொறுப்பு என 9 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் என்றே கருதுகிறேன். இதைப் பாதுகாத்து அடுத்த கட்டத்துக்கு நகா்த்தும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.