உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவரது உரையைச் சுருக்கமாகப் பேசி முடித்தார்.
விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பிறந்த நாளான இன்று உளுந்தூர்பேட்டை பகுதியில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.
இதற்காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலைப் பகுதியில் மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மேடை அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பாட்டாளர்கள் திணறினர்.விசிக தலைவர் திருமாவளவன், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
தொண்டர்கள் மேடையில் குவியத் தொடங்கியதாலும், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும், திருமாவளவன் அவரது உரையைச் சுருக்கமாகப் பேசி மாநாட்டை நிறைவு செய்தார்.
கூட்ட நெரிசலுக்கு மத்தியில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், ”உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்தச் சூழ்நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Summary
Thol. Thirumavalavan, the leader of the Viduthalai Chiruthaigal, cut his speech short due to severe overcrowding at the party's conference held in Ulundurpet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

“அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்!
முதல்வர் தலைமையில் எஸ்சி, எஸ்டி விழிப்புணர்வுக் குழுவில் திருமாவளவன், ஆ. ராசா?
தவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!
துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |



