தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசிக விருது வழங்கும் நிகழ்ச்சியில், அக்கட்சித் தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
”பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக தவெக வந்தது. திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்ததால் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல்தான் இருந்தது. தவெகவை நாங்கள் விமர்சித்திருக்கிறோம். பதவிக்காக எப்படி ஒட்டிக் கொள்ள முடியும். ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என்று விமர்சித்துவிட்டு, ஆதரவு கொடுக்கிறோம், துணை முதல்வர் பதவி கொடுங்கள் என்று பேசினோமோ?
திமுக கூட்டணியில் தொடர்கிறோமா என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமையே அறிவித்துவிட்டது. இதுவரை நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமோ என்றும் அறிவிக்கவில்லை.
தவெக கூட்டணி தொடர்பாக ஜூலை 1 ஆம் தேதி கூட்டத்தில் பேசியுள்ளோம். அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை தவெக தலைமையில் கூட்டணி உருவானால், அதில் இடம்பெறும். அதில், எந்த ஐயமுமில்லை.
திமுக தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விசிகவிலிருந்து ஒருவரை அழைத்து கட்சியில் இணைத்தபோது, திமுக தலைமையே எங்களுடன் உறவு இல்லை எனச் சொல்லிவிட்டது. விசிகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது பெருமதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் அண்ணன் மு.க. ஸ்டாலின்தான்” எனத் தெரிவித்தார்.
Summary
VCK will be part of the TVK alliance - Thirumavalavan announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






