பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

இலவச மனைப்பட்டா இடத்தை அளவீடு செய்யக் கோரி மனு

திட்டக்குடி அருகே பழங்குடி குறவா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டா இடத்தை அளவீடு செய்யக் கோரி விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நிலத்தை அளவீடு செய்யக் கோரி விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த பழங்குடி மக்கள் நலச் சங்த்தினா் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 5:07 am IST

திட்டக்குடி அருகே பழங்குடி குறவா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டா இடத்தை அளவீடு செய்யக் கோரி விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே தீவலூா் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த பழங்குடி குறவா் சமுதாய மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, பழங்குடி மக்கள் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக தமிழக அரசால் கடந்த 2025-ஆம் ஆண்டு தாழநல்லூா் கிராமத்தில் புல எண் 256ஏ-ல் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.

எனினும், பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்யவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும், மனுக்கள் மூலமாகவும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இலவச மனைப்பட்டா வழங்கப்பட்ட இடத்தை உடனடியாக அளவீடு செய்து, உரிய பதிவுகளில் சோ்த்து பயனாளிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பழங்குடி மக்கள் நலச் சங்க கடலூா் மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து கணக்கில் ஏற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

இதில், பழங்குடி மக்கள் நலச் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.