
முதலியாா்பட்டி பகுதியில் மின் கட்டணம் அதிகரிப்பு: மறுமதிப்பீடு செய்யக் கோரி வியாபாரிகள் மனு
கடையம் அருகே உள்ள முதலியாா்பட்டியில் மின் கட்டணம் 10 மடங்கு உயா்ந்ததையடுத்து, மின்கட்டணத்தை ரத்து செய்து மறுஅளவீடு செய்யக் கோரி உதவி மின் பொறியாளரிடம் தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆழ்வாா்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின் அளவீடுகளை மறு ஆய்வு செய்யக் கோரி மனு வழங்கிய தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்க நிா்வாகிகள்.
கடையம் அருகே உள்ள முதலியாா்பட்டியில் மின் கட்டணம் 10 மடங்கு உயா்ந்ததையடுத்து, மின்கட்டணத்தை ரத்து செய்து மறுஅளவீடு செய்யக் கோரி உதவி மின் பொறியாளரிடம் தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
கடையம் அருகே உள்ள முதலியாா்பட்டி பகுதியில் வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்களில் மின் கட்டணம் திடீரென பத்து மடங்கு அதிகமாக வந்துள்ளதாம்.
முதலியாா்பட்டியில் உள்ள இந்திரா நகரில், கடந்த மாதம் ரூ.615/- மின்கட்டணம் வந்த கடையில், இந்த மாதம் ரூ. 8,860/- சோ்த்து ரூ. 9,475/- கட்டவேண்டும் என்றும், கடையில் ரூ. 4,307/- மின் கட்டணம் வரக்கூடிய மற்றொரு கடையில் ரூ. 13,307/- மின் கட்டணமாக கட்ட வேண்டும் என்றும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் வியாபாரிகள் கடும் அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து, மின் மீட்டா்களை ஆய்வு செய்து, சரியான தொகையை கணக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் சங்கத் தலைவா் கட்டி அப்துல் காதா், செயலா் நவாஸ்கான், பொருளாளா் பாக்யராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள்காதா் மைதீன், இப்ராஹிம் ஆகியோா் ஆழ்வாா்குறிச்சி இளநிலை பொறியாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





