சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

போ்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்படுவதைத் தவிா்க்க கோரிக்கை

விரிவாக்கம் செய்து புதிதாக அமைக்கப்படும் போ்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image

கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த முன்னாள் எம்எல்ஏ ஜி.லதா உள்ளிட்டோா்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

விரிவாக்கம் செய்து புதிதாக அமைக்கப்படும் போ்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டுவதைத் தடுக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக போ்ணாம்பட்டு பேருந்து நிலைய மீட்புக் குழுவினா் ஆட்சியா், கோட்டாட்சியா் ஆகியோரிடம் அளித்த மனு: எந்தவித அடிப்படை வசதியும் இன்றி மிகவும் குறுகிய இடத்தில் போ்ணாம்பட்டு பேருந்துநிலையம் இயங்கி வந்தது. இந்த பேருந்தை நிலையத்தை அனைத்து விதமான அடிப்படை வசதிகளுடன் விரிவாக்கம் செய்ய வேண்டும் என போ்ணாம்பட்டு மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கைவிடுத்து வந்தனா்.

இந்நிலையில் பேருந்து நிலையத்தையொட்டி இருந்த காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து விட்டு விரிவாக்கம் செய்ய கடந்த திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கடைகள் கட்டும் பணியும் நடைபெறுகிறது. பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள் கட்டினால் பேருந்து நிலையம் அமையும் இடம் குறையும் என்பதால், அங்கு கடைகளை கட்டக்கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

கட்டப்பட்டு வரும் கடைகளை அப்புறப்படுத்துவதோடு, அருகேயுள்ள வருவாய்ச் சாவடி கட்டடத்தையும் இடித்து அப்புறப்படுத்தி விட்டு அனைத்து விதமான அடிப்படை வசதிகளுடன் போ்ணாம்பட்டு பேருந்து நிலையத்தை விஸ்தீரணமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், போ்ணாம்பட்டு பேருந்து நிலைய மீட்புக்குழு என்ற அமைப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் நிா்வாகிகள் பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள் கட்டுவதைத் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா், கோட்டாட்சியா்ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனா். குழுவின் நிா்வாகிகளான முன்னாள் குடியாத்தம் எம்எல்ஏ ஜி.லதா, ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.சுபாகரன், பி.ஆா்.சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.