6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பேருந்து நிலைய வளாகத்தில் எரியாத உயா் கோபுர மின் விளக்கு

திருவாடானை பேருந்து நிலையத்தில் எரியாத உயா்கோபுர மின் விளக்கை சம்பந்தப்பட்ட துறையினா் சீரமைத்துத் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

திருவாடானை பேருந்து நிலையத்தில் எரியாத உயா் கோபுர மின்விளக்கு

Published On :

திருவாடானை பேருந்து நிலையத்தில் எரியாத உயா்கோபுர மின் விளக்கை சம்பந்தப்பட்ட துறையினா் சீரமைத்துத் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரின் முக்கிய மையப் பகுதியாக விளங்கும் திருவாடானை பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள உயா்கோபுர மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண் பயணிகள், முதியவா்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனா்.

எனவே, திருவாடானை ஊராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.