ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

உடைந்த ஒசூா் பேருந்து நிலைய மேற்கூரையை சீரமைக்கக் கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையத்தில் உடைந்த நிலையில் உள்ள மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

உடைந்த ஒசூா் பேருந்து நிலைய மேற்கூரை.

Updated On :26 ஜூன் 2026, 6:15 am IST

ஒசூா் பேருந்து நிலையத்தில் உடைந்த நிலையில் உள்ள மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் சுமாா் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா். ஒசூா் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளதால், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் பேருந்துகள், மற்ற வாகனங்கள், அதேபோல ஒசூா் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகதான் செல்ல வேண்டும். இதனால், பேருந்து நிலையத்தில் இரவு, பகல் என எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

பேருந்து நிலையத்தில் கடைகள் ஆக்கிரமித்தும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதுமாக உள்ளதால், பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனா். மேலும், பேருந்து நிலையத்தின் மேற்கூரை உடைந்து காணப்படுவதால், மழைக் காலங்களில் மழைநீா் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பேருந்து நிலைய மேற்கூரையை சீரமைத்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளையும், இருசக்கர வாகனங்களையும் அகற்றி, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.