பிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கே
ஜந்தர் மந்தர் போராட்டக் களம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது போல, நாளை நாட்டிலிருந்து ஜனநாயகமும் நீக்கப்படும் என அபிஜீத் தீப்கே தெரிவித்தது குறித்து...

சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - ANI
ஜந்தர் மந்தர் போராட்டக் களம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது போல, நாளை நாட்டிலிருந்து ஜனநாயகமும் நீக்கப்படும் என அபிஜீத் தீப்கே இன்று (அக். 12) குற்றம் சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டி அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் போன்றவை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராட்டம் நடத்த ட்திட்டமிட்ட நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை.
ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, அங்குப் போராட முயன்றவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாகத் திகழ்ந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என மத்திய அரசு சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்ததாவது:
ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்தும் இடமில்லை என்று அரசு அறிவித்துவிட்டது. ஆம், அது இனி போராட்டக் களம் அல்ல, ஏனெனில் கோழை சர்வாதிகாரியால் அது ஒரு போர்க்களமாக மாற்றப்பட்டுவிட்டது.
இன்று, ஜந்தர் மந்தரை அறிவிக்கப்பட்ட போராட்டக் களம் என்ற நிலையிலிருந்து பிரதமர் மோடி நீக்கினார். நாளை, அவர் நாட்டிலிருந்து ஜனநாயகத்தையே நீக்குவார். அந்த சர்வாதிகாரியின் பிரச்னை ஒருபோதும் போராட்டக் களமாக இருந்ததில்லை. மக்களின் போராடும் எண்ணம்தான் அவரின் பிரச்னை என்று அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.
Summary
Abhijit Deepke alleged today (Oct. 12) that just as Jantar Mantar was declared off-limits for protests, democracy itself could be removed from the country tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


