அபிஜீத் தீப்கே பாட்டி மறைவு; இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரை விடுவிக்க வேண்டும்: சிஜேபி கோரிக்கை!
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் பாட்டி மறைந்ததாகக் கூறப்படும் நிலையில், இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரை விடுவிக்க வேண்டும் என சிஜேபி கோரிக்கை வைத்துள்ளது.

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் பாட்டி மறைந்ததாகக் கூறப்படும் நிலையில், இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரை விடுவிக்க வேண்டும் என சிஜேபி கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
இதில், கலந்துகொண்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள், இளைஞர்கள், செய்தியாளர்கள் பலரும் இன்று காலை முதல் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர்களான மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், பினராயி விஜயன் ஆகியோரும் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தில்லியில் போராட்டத்தை முன்னெடுத்த சிஜேபி கட்சியின் நிறுவனரான அபிஜீத் தீப்கேவை காவல்துறையினர் எங்கு அடைத்து வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை என சிஜேபி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அபிஜீத் தீப்கே இன்று காலை விமானத்தில் தில்லி வந்தபோது காவல்துறையினரால் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என எந்தத் தகவலையும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, அபிஜீத் தீப்கேவின் பாட்டி இன்று மறைந்ததாகச் செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக, காவல்துறை சார்பில் வெளியான தகவலில், “சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு அவரது பாட்டியின் மறைவு குறித்து தில்லி காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இங்கேயே தங்கி, தடுப்புக் காவலில் போராட்டத்தைத் தொடர்வதா அல்லது இறுதிச் சடங்குகளுக்காகத் திரும்பிச் செல்வதா என்பதை அவரே முடிவு செய்யவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்திக்குக் கண்டனம் தெரிவித்த சிஜேபி கட்சியினர் அபிஜீத் எங்கே வைக்கப்பட்டுள்ளார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக, சிஜேபி சமூக ஊடகப் பதிவில், “அபிஜீத் தீப்கே மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்கொண்டுள்ள இந்தத் தனிப்பட்ட துயரத்தை வைத்து தில்லி காவல்துறை இவ்வளவு மலிவான அரசியலில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.
அபிஜீத் தீப்கேயின் குடும்பத்தினருக்கோ அல்லது சிஜேபி வழக்குரைஞர்களுக்கோ அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சிஜேபி-இன் மூன்று தலைவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இதுபோன்ற தகவல்களைச் செய்தி ஊடகங்களுக்குக் கசிய விடுவதற்குப் பதிலாக, அபிஜீத்தின் குடும்பத்தினரும் வழக்குரைஞர்களும் அவரைத் தொடர்பு கொள்ள தில்லி காவல்துறை அனுமதித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
Summary
Passing of Abhijeet Dipkes grandmother; CJP demands his release to attend the funeral
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


