ஆர்எஸ்எஸ், பாஜகவின் கோழைத்தனம் முழுமையாக வெளிப்பட்டுள்ளது: கார்கே
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்த பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப் படம்
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்த பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.
தேர்தல் நடைமுறைகளில் மாற்றம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி அறிவித்திருக்கும் போராட்டத்தை முன்னிட்டு, ஏராளமான இளைஞர்களும், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
போராட்டப் பகுதியில் செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புது தில்லி முழுவதும் பதற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “நமது இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத் தலைவர்கள், யூடியூபர்கள் என இந்த ஆட்சியை கேள்வி கேட்கும் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
’ஜனநாயகத்தின் தாய்’ எனப் போற்றப்பட்ட இந்நாட்டை, மோடி அரசு ’வாய் மூடப்பட்ட ஜனநாயகமாக’ மாற்றியுள்ளது!
பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கோழைத்தனம் இன்று முழுமையாக வெளிப்பட்டுள்ளது.
காவலில் வைப்பதோ, கைதுகளோ, சிறை தண்டனைகளோ, லத்தி அடிகளோ, பெல்லட் தாக்குதலோ இந்திய மக்களை அச்சுறுத்தி பின்வாங்கச் செய்யாது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே, நம் நாட்டின் விதியைத் தீர்மானிப்பதில் இளைஞர்களே முன்னணியில் இருந்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி இந்த சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடும்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக நாம் நமது ரத்தத்தைச் சிந்தினோம். அதேபோல நமது ஜனநாயகம், நமது அரசியலமைப்பு மற்றும் ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க, நமது முழு பலத்துடன் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Summary
Mallikarjun Kharge has posted a statement condemning the BJP government for arresting the youths who were protesting in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


