சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! இடைத்தேர்தல் வெற்றி விஜய் அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்: வைகோதமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

எங்கு தடுத்து நிறுத்தப்படுகிறீர்களோ...சிஜேபி போராட்டம் குறித்து அஜிங்கியா அறிவுரை

எங்கு தடுத்து நிறுத்தப்படுகிறீர்களோ அதுவே உங்கள் ஜந்தர் மந்தர் என சிஜேபி போராட்டம் குறித்து அஜிங்கியா அறிவுரை

CJP protests

சிஜேபி போராட்டம் - PTI

Published On :

ஜந்தர் - மந்தர் நோக்கி வந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சிஜேபியின் புதிய தலைவர் அஜிங்கியா தன்னுடைய முதல் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த தலைநகரமும் பதற்றமான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

புது தில்லிக்கு விமானத்தில் வந்த அபிஜீத் தீப்கே, தில்லி காவல்துறையினரால் விமானத்துக்குள்ளேயே கைது செய்யப்பட்டார்.

போராட்டத்துக்கு ஆதரவு அளித்த புது தில்லி முன்னாள் முதல்வர் கேஜரிவாலும், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு, அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே கைதான நிலையில், புதிய தலைவராக அஜிங்கியா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இளைஞர்களுக்கு வெளியிட்ட விடியோவில், கரப்பான்பூச்சி கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர். மோடியும் அமித் ஷாவும் இணைந்து சிஜேபி போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறார்கள்.

ரயில்கள், பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஜந்தர் மந்தருக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்களே, ஜந்தர் மந்தர் நோக்கி வரும் உங்களை காவல்துறை எங்கு தடுத்து நிறுத்துகிறதோ, அதுதான் உங்கள் ஜந்தர் மந்தர். அங்கு போராட்டத்தைத் தொடருங்கள். ஞானேஷ்குமார் ராஜிநாமா செய்யும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.