ஜந்தர் மந்தர் போராட்டம்! சிஜேபி தலைவர்களிடம் தில்லி போலீஸ் 4 மணிநேரம் விசாரணை!
ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து சிஜேபி தலைவர்களிடம் விசாரணை...

சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ். - படம் - பிடிஐ
ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) தலைவர்களிடம் தில்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில் கடந்த அக்.13 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்துக்கு எதிராகப் பதிவான 2 வழக்குகளின் கீழ் சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் இன்று (நவ. 5) தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகளின் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.
இதையடுத்து, ராஜௌரி கார்டன் பகுதியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற விசாரணையில் சிஜேபி தலைவர்களிடம் சுமார் 70 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவற்றில் சில கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணை குறித்து அசுதோஷ் ரங்கா கூறுகையில்,
“நாங்கள் ஏற்கெனவே கூறியது போல, விசாரணை எதுவாக இருந்தாலும் அதற்கு நாங்கள் முழு ஒத்தழைப்பு வழங்குவோம் என்பதை நாங்கள் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மூவர்ணக் கொடியை ஏற்றுவது ஒரு குற்றமாக இருக்கக் கூடாது. இந்த விசாரணையானது முறையாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்; அதற்கு நாங்கள் நிச்சயம் ஒத்துழைப்பு அளிப்போம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, போராட்டம் நடத்தும் இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில், தேசியக் கொடியை ஏற்ற முயன்றது தொடர்பாக, சிஜேபி நிர்வாகிகள் மீது கன்னாட் பிளேஸ் மற்றும் நாடாளுமன்றத் தெரு காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
The Delhi Police have questioned office-bearers of the Cockroach Janta Party regarding the protest at Jantar Mantar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


