தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றி தெரிந்துகொள்ள..! - அமித் ஷா தாக்கு!

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்...

Union Home and Cooperation Minister Amit Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ANI

Updated On :

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுண்டு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஹரியாணாவின் கர்னலில் இன்று (நவ. 5) நடைபெற்ற பாஜக பேரணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது, ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“நீங்கள் (ராகுல்) இப்போதுதான் வியத்நாமில் இருந்து திரும்பி வந்தீர்கள். ஆனால், அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ராகுல் அவர்களே உங்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் மக்களிடம் விளக்கம் கூறுங்கள். வியத்நாமில் எத்தனை நாள்கள் தங்கினீர்கள், யாரையெல்லாம் சந்தித்தீர்கள் எதற்காகச் சென்றீர்கள் அங்கு என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தன என்பது குறித்து கூறுங்கள்.

நீங்கள்தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் இதுபற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுண்டு” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அதே வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் கேரளத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் எதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவியேற்றார்கள் என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Amit Shah has stated that the public has a right to know about the foreign trips of the LOP Lok Sabha, Rahul Gandhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER