2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் ராகுல் காந்திக்கு அமித் ஷா எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து...

அமித் ஷா - பிடிஐ
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) இருந்ததா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் 3 கோடி பேர் வாக்காளர் பெயர் பட்டியலிலேயே இல்லை என்றும் அவர்கள் வங்கதேச ஊடுருவல்காரர்கள் எனவும் குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், ஊடுருவல்காரர்களை காப்பதற்காக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன
இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (நவ. 1) நடைபெற்றது.
இதற்கு பதில் அளித்து தில்லியில் அமித் ஷா பேசியதாவது:
''வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவருவது வங்கதேச ஊடுருவல்காரர்களை காப்பாற்றுவதற்காகவேதான்.
எஸ்.ஐ.ஆர். மூலம் நாட்டில் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில், 6.25 கோடி வாக்காளர்கள் வேறு முகவரிக்கு மாறியுள்ளனர். 3 கோடி மக்கள் இறந்துவிட்டனர். தோராயமாக ஒரு கோடி பேருக்கான அட்டைகள் போலிகளாக உள்ளன. மீதமுள்ள 3 கோடி பேர் பட்டியலியேயே இல்லை. அவர்கள் வங்கதேச ஊடுருவல்காரர்கள்.
ஒருவருக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால், அதில் ஒன்றை நீக்காமல் வேறு என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். நாட்டில் இருந்தும் அகற்றப்படுவர்.
ராகுல் காந்தியிடம் ஒன்றைக் கேட்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றார். அப்போது எஸ்.ஐ.ஆர். இல்லை. 2019 ஆம் ஆண்டும் மோடி வெற்றி பெற்றார். அப்போதும் எஸ்.ஐ.ஆர். இல்லை. அவர் நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு மகாராஷ்டிரத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றோம். ஹரியாணாவில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியிலும் வெற்றி பெற்றுள்ளோம். பிகார், மேற்கு வங்கம் என அடுத்தடுத்து பாஜக வென்றுள்ளது. இதற்கு மக்கள் அளித்த வாக்குகளே அன்றி வேறு காரணம் என்ன?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Summary
Was the SIR present during the election victories of 2014 and 2019? Amit Shah asks Rahul
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


