
நாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தி
நாட்டின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடையும்போது மோடியும் அமித் ஷாவும் தோற்காதது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி...

ராகுல் காந்தி - PTI
நாட்டின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடையும்போது பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தோற்காதது ஏன்? என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குத் திருட்டை காங்கிரஸ் அம்பலப்படுத்திய அதே நேரத்தில்தான் தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை கடிதம் எழுதியுள்ளதாகவும், பிரதமர் மோடி நியமித்தவர்களே (தேர்தல் ஆணையர்கள்) எஸ்.ஐ.ஆரில் குளறுபடிகள் உள்ளதை எதிர்த்து நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி பேசியதாவது:
''தேர்தல் ஆணையரை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி. முக்கியத் தலைவர்கள் தோல்வியடையும்போதும், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மட்டும் ஏன் தோற்கவில்லை? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் குளறுபடி நடந்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஒரு அரசின் மீது மக்களின் எதிரான மனநிலை மிக விரைவிலேயே உருவாகிவிடும்.
வங்கதேச போரில் வெற்றி பெற்று, தனது செல்வாக்கின் உச்சத்தில் இருந்தபோதே இந்திரா காந்திக்குக்கூட, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே கடுமையான எதிர்ப்பும் நெருக்கடியும் உருவானது.
மாநிலத்தின் பெரிய பெரிய தலைவர்களின் ஆட்சி எதிரான மனநிலை மக்களிடையே ஒரு காலகட்டத்துக்கு மேல் உருவானது. ஆனால், ஏனோ தெரியவில்லை, நரேந்திர மோடிக்கோ, அமித் ஷாவுக்கோ அல்லது பாஜகவுக்கோ மட்டும் இத்தகைய நிலை ஒருபோதும் ஏற்படுவதில்லை.
மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் என எல்லா இடங்களிலும் திடீரென மக்களிடையே உருவான அதிருப்தி மறைந்திருக்கிறது.
ஒரு தனிநபரின் செல்வாக்கையோ அல்லது ஒரு அரசாங்கத்தின் செயல்பாட்டையோ எங்களால் புரிந்துகொள்ள முடியும்; ஆனால் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி எப்படி திடீரென மறைந்துவிடுகிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஜனநாயகமுறை அமலில் உள்ள எந்தவொரு நாட்டிலும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி மனநிலை உருவாகாமல் இருந்ததில்லை. ஆனால், பாஜகவுக்கு அது நடந்திருக்கிறதா?
இது வாக்குரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல. இது ஒவ்வொரு இந்தியரின் கருத்து, அடிப்படை கட்டமைப்பு மற்றும் அவர்களின் வெளிப்பாட்டு உரிமை ஆகியவற்றின் மீதான தாக்குதல்'' என ராகுல் காந்தி பேசினார்.
Summary
Key leaders across the country are losing Why haven't Modi and Amit Shah lost Rahul Gandhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


சரத் பவார் வீட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் அருகருகே நின்றும் கண்டுகொள்ளாத ராகுல் - அமித் ஷா!





