
100% எத்தனாலில் முதல் கார் அக்டோபரில் அறிமுகம்! விவசாயிகளுக்கு ரூ. 45,000 கோடி பலன்: நிதின் கட்கரி
எத்தனால் தயாரிப்பு முடிவால் விவசாயிகள் பயனடைந்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது குறித்து...

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி - கோப்புப் படம்
நாட்டில் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து இதுவரையில் எந்தப் புகாரும் வரவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, "உலகில் 19 நாடுகளில் எரிபொருளாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் எந்தவொரு வாகனத்திலும் எத்தனால் எரிபொருள் குறித்து எந்தவொரு புகாரும் இதுவரையில் வரவில்லை.
100 சதவிகிதம் எத்தனாலில் இயங்கும் கார் அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த வாகனம் 100 சதவிகிதம் எத்தனாலில் இயங்குவதுடன், இயங்கும்போது 60 சதவிகிதம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். மேலும், இது எந்த மாசுபாட்டையும் ஏற்படுத்தாது.
மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்கும் முடிவால், உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் உள்ள விவசாயிகள் ரூ. 45,000 கோடி மதிப்பில் பயனடைந்துள்ளனர்.
எத்தனால் எரிபொருள் பயன்பாட்டால் வணிகர்கள் சிலருக்கு ரூ. 22 லட்சம் கோடி இழப்பு ஏற்படலாம். அவர்கள்தான் என்னைத் திட்டுவார்கள். இருப்பினும், அது எனக்கு ஒரு பொருட்டல்ல. விவசாயிகள் நலனுக்காகவே நாம் பணியாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
The decision to make ethanol from maize has given ₹45,000 crore to farmers, says Union Minister Nitin Gadkari
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




