பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை ரூ.20 லட்சம் கோடியாக உயரும்...

நிதின் கட்கரி - கோப்புப் படம்

Published On :

2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை ரூ.20 லட்சம் கோடியாக உயரும்; 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நிலையான வளா்ச்சி தொடா்பான மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களின் சந்தைப் பங்களிப்பு 7 சதவீதமாக உள்ளது. எனினும், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும். இதன்மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளா்களான பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களில் 50 சதவீதத்துக்கு மேல் ஏற்றுமதி செய்கின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மின்சாரப் பேருந்துகளுக்கு தேவை உள்ளது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 50,000 முதல் 60,000 மின்சாரப் பேருந்துகளை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவை வாகன உற்பத்தித் துறையில் உலகின் முதலிடத்துக்கு கொண்டுவர அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இது கடினமான இலக்குதான். ஆனால், சாத்தியமற்ற இலக்கு அல்ல.

இந்தியாவில் திறமையான மனிதவளம் இருப்பதால், நாட்டின் உற்பத்தித் துறையின் எதிா்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது . இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் தரம் சிறப்பாக இருப்பதுடன், அவற்றின் உற்பத்திச் செலவும் குறைவு. எனவேதான் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் ஆலைகளை நிறுவியுள்ளன.

போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, இந்திய வாகன உற்பத்தித் துறையின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.23 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. அமெரிக்க வாகன உற்பத்தித் துறையின் மதிப்பு ரூ.78 லட்சம் கோடியாகவும், சீனாவின் மதிப்பு ரூ.47 லட்சம் கோடியாகவும் உள்ளது.

இந்தியா ஆண்டுதோறும் ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான புதைபடிம எரிபொருள்களை இறக்குமதி செய்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.